search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்"

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து ஏ.பி.வி.பி. மாணவர் சங்க உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தால் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. #JNUSUPoll
    புதுடெல்லி:

    தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை துவங்கியது. இந்த தேர்தலில் போட்டியிட்ட ஏ.பி.வி.பி. என்ற மாணவர் சங்கத்துக்கு வாக்கு எண்ணிக்கை குறித்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, எதிர்ப்பாராதவிதமாக வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைந்த ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் வாக்குப்பெட்டிகளை உடைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பல்கலைக்கழக தேர்தல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஏ.பி.வி.பி. சங்க மாணவர்கள் மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுக்கு அதன் தலைவர் விஜய் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். தாங்கள் அமைதியான முறையில் நியாயம் கேட்கவே போராட்டம் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஏபி.வி.பி.யின் போராட்டத்தினாலேயே வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதாக கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர். #JNUSUPoll
    ×